சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தி.நகர் இல்லத்தில் சசிகலாவை சந்தித்தார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் சசிகலாவுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஒரு வாரத்திற்கு சசிகலா ஓய்வில் இருப்பார். சி.வி. சண்முகம் பேசியது அவரின் தரத்தை காட்டுகிறது. சி.வி. சண்முகம் முதலில் நிதானமாக இருக்க வேவண்டும். ஒரு வார காலமாக நாங்கள் அமைதியாக இருக்கிறோம். இவர்கள் ஏன் பதறுகிறார்கள்.
முதலமைச்சர் பதவி கொடுத்த சசிகலாவுக்கும், மக்களுக்கும் அவர்கள் விசுவாசமாக இல்லை. பொதுச்செயலாளரை கட்சியிலிருந்து நீக்க யாருக்கும் அதிகாரமில்லை, பதவி போனால் இவர்கள் எல்லாம் எங்கு போவார்கள் என்று தெரியும், திமுகவை கண்டு அச்சம் கொள்பவர்கள் அமைச்சர்கள்தான். திமுகவை கண்டு நாங்கள் பயப்படவில்லை, எங்களுக்கு மடியிலே கணம் இல்லை.