சென்னை அசோக் நகரில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் இன்று துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதில்,
ஏழு பேர் விடுதலை மற்றும் இஸ்லாமிய கைதிகள் விடுதலை வலியுறுத்தப்படும்.
நெல், கரும்பு மற்றும் சிறு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை.
மாணவர்கள் நல ஆணையம் அமைக்கப்படும்.
மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை.
டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.
விவசாயத்திற்கு இலவச ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்.
ஏழை கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டு ரூ.10,000 கல்வி உதவி தொகை.
கல்லூரி வளாகங்கள் அனைத்திற்கும் இலவச WIFI வசதி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி வழங்கப்படும்.
கிராமப்புற மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு ரூ.50,000 முதல் 2 லட்சம் வரை வணிகக் கடன்.
முதியோர் உதவித்தொகை மாதத்திற்கு ரூ.1000-லிருந்து ரூ.2000-ஆக உயர்வு.
வயது முதிர்ந்த ஆண் பெண் விவசாயத் தொழிலாளர்கள்,நெசவாளர்கள், மீனவர்கள் மற்றும் அமைப்புச் சாராதொழிலாளர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை வழங்கப்படும்உட்பட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.