அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் பணியாளர் தேர்வில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு மிகக் குறைந்த அளவில் கட்ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறித்து வங்கி நிர்வாகமும் மத்திய அரசும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
எஸ்பிஐ கட்ஆஃப் மதிப்பெண்: டிடிவி தினகரன் கண்டனம் - sbi
சென்னை: பாரத ஸ்டேட் வங்கியின் பணியாளர் தேர்வில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு மிகக் குறைந்த அளவில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் வழங்கியதற்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தினகரன்
தாழ்த்தப்பட்டோருக்கு 61.25, பழங்குடியினருக்கு 53.75, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 61.25 என நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்ஆஃப் மதிப்பெண்கள், 10 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றுள்ள முற்பட்ட வகுப்பினருக்கு மட்டும் 28.5ஆனது எப்படி?
சமூகநீதியின் அடித்தளத்தையே சிதைக்கும் இந்தத் தவறு உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.