இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,“அஞ்சல் துறையில் வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் இனிமேல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் இருப்பவர்கள் அஞ்சல் துறை வேலை வாய்ப்புகளைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.
இருமொழியில் அஞ்சல்துறை தேர்வு; டிடிவி தினகரன் கண்டனம்! - அஞ்சல்துறை
சென்னை: "அஞ்சல்துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே எழுத முடியும்" எனும், மத்திய அரசின் சுற்றறிக்கையை, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கண்டித்துள்ளார்.
டி டி வி தினகரன் கண்டனம் !
தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் அஞ்சல் துறை வேலை வாய்ப்புக்காக முயற்சிப்பவர்களுக்கு அநீதியாக இது அமைந்து விடும். எனவே இந்திய அஞ்சல் துறை ஏற்கனவே அறிவித்திருந்தபடி 23 மாநில மொழிகளிலும் பணியாளர் தேர்வுக்கான தேர்வுகளை நடத்த வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்ற சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.