தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 8, 2019, 10:58 PM IST

ETV Bharat / state

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு குட் பை சொல்லும் 'அம்மா குடிநீர்’

சென்னை: தமிழ்நாடு அரசால் பிளாஸ்டிக் பாட்டில்களில் விநியோகிக்கப்படும் அம்மா குடிநீர் இனி கண்ணாடி பாட்டில்களில் வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

water

தமிழ்நாட்டில் அம்மா குடிநீர் ஒரு லிட்டர் பாட்டில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதில் 75ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் ஒரு நாளுக்கு விற்பனையாகின்றன.

தமிழ்நாடு போக்குவரத்துதுறை சார்பில் விநியோகிக்கப்படும் அம்மா குடிநீர்வ பாட்டில்கள் பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் கிடைக்கிறது. பிளாஸ்டிக் பாட்டில்களில் கிடைக்கும் இந்த தண்ணீரை மக்கள் குடித்துவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை அப்படியே வீசிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் பேருந்து நிலையங்களில் பார்க்கும் இடங்கள் எல்லாம் பிளாஸ்டிக்காக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்தித்துள்ளது. அதை முன்னெடுக்கும் வகையில், அம்மா குடிநீரை பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில் மூலம் விற்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

750மிலி என்ற அளவில் தண்ணீர் நிரப்பிய கண்ணாடி பாட்டில்களை 5 ரூபாய் அல்லது 7 ரூபாய்க்கு விற்க அரசு ஆலோசித்து வருகிறது. கும்மிடிப்பூண்டியில் உள்ள அம்மா குடிநீர் தயாரிப்பு வளாகத்தில் இந்த பாட்டில்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. இதற்கான கருவிகள் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு டெண்டர்விட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்து நாளொன்றுக்கு 2 லட்சம் வாட்டர் பாட்டில்கள் தயாரிக்கப்படும். ஐந்தாண்டிற்குள் இந்த கண்ணாடி பாட்டில்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'சாலையில் வீணாகச் செல்லும் தண்ணீரை சேமிக்க வேண்டும்!'

ABOUT THE AUTHOR

...view details