தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மகளிர் தின வாழ்த்துக்கள்’-டிடிவி தினகரன்! - women day

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு டிடிவி தினகரன் அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

மகளிர் தினம்
டிடிவி தினகரன் அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

By

Published : Mar 8, 2021, 12:31 PM IST

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயளாளர் டிடிவி தினகரன், மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “உலகை இயக்குகிற உன்னத சக்தியாக திகழும் பெண்மையை போர்றுகின்ற இந்நாளில் மாதர் குலத்திற்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பெண் இனத்தின் பெரும் வெளிச்சமாக, அவர்களின் நல்வாழ்வுக்கு நம்பிக்கையூட்டும் என்ணற்ற திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திய இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருப்பெயரைத் தாங்கி நிற்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அம்மாவின் வழியில் பெண்களுக்காக பாடுபடுவதில் உறுதியோடு இருக்கிறது.

நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் பெண்கள் பெற வேண்டும் என்ற பாரதியின் வார்த்தைகளை உண்மையாக்கி, சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி ஒவ்வொரு பெண்ணும் உயர்ந்து, சிறந்திட இந்த இயக்கம் துணை நிற்கும்.

பெண்கள் நினைத்தால் இந்தச் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டு வர முடியும். அத்தகைய மாற்றத்தின் தொடக்கமாக நம்முடைய இல்லங்கள் அமையட்டும். பெண்களை மதித்து கொண்டாடுவதுடன் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவதையும் நாம் அனைவரும் நம்முடைய வீடுகளிலிருந்து தொடங்குவோம்.

அன்பின் சிகரங்களாக, தியாகத் தழும்புகளைச் சுமக்கின்ற பெண்குலத்தை ஆண்டின் எல்லா நாள்களிலும் கொண்டாடி மகிழ்வோம்” என்றார்.

இதையும் படிங்க:மகளிர் தினம்: கரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப்பெண்களின் நம்பிக்கை கதை!

ABOUT THE AUTHOR

...view details