தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டும் 71 ஆயிரத்து 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை எடுப்பதற்கு அதிக செலவு ஆவதால், பலர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை எடுத்துவருகின்றனர்.
சென்னையில் அப்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்துவருபவர்களுக்கு, ’அம்மா கோவிட் ஹோம் கேர்’ என்ற திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்படி, வீடுகளில் சுயமாக பரிசோதனை செய்து கொள்பவர்களுக்காக பெட்டகம் வழங்கப்படும். இந்தப் பெட்டகத்தில் கபசுரக் குடிநீர், 14 நாள்களுக்குத் தேவையான கரோனா எதிர்ப்பு மாத்திரைகள் இருக்கும். மேலும், அவர்களுக்கு செவிலியர், மருத்துவர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ரவீந்திரநாத் இந்நிலையில் அம்மா கோவிட் கேர் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
அதில், "அரசு சென்னையில் அறிமுகப்படுத்தயுள்ள அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் வர வேற்புக்குரியது. கரோனா பரவலை தடுக்க இத்திட்டம் உதவிக்கரமாக இருக்கும்.
இத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உடனடியாக விரிவுப்படுத்த வேண்டும். இதில் சில, தேவையான முக்கிய இரத்தப் பரிசோதனைகளையும் சேர்க்க வேண்டும். இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் அமைச்சருக்கு கரோனா - சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!