தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்ப்பிணியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ், மாநகராட்சி வாகனம் மீது மோதி விபத்து - ஆம்புலன்ஸ் விபத்து

சென்னையில் கர்ப்பிணியை வேகமாக சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று மாநகராட்சி வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

கர்ப்பிணி பெண்ணை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ், மாநகராட்சி வாகனம் மீது மோதி விபத்து
கர்ப்பிணி பெண்ணை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ், மாநகராட்சி வாகனம் மீது மோதி விபத்து

By

Published : Feb 21, 2022, 12:53 PM IST

சென்னை: மாங்காட்டில் இருந்து சிகிச்சைக்காக கர்ப்பிணியான சாஹிரா பேகம், அவரது உறவினர்கள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு நேற்று இரவு (பிப். 20) வேகமாக வந்து கொண்டிருந்தது.

அப்போது, அரும்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை திருவீதி அம்மன் கோயில் அருகே மாநகராட்சி வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையை சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

கர்ப்பிணி படுகாயம்

அப்போது, கீழ்ப்பாக்கத்தை நோக்கி வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மாநகராட்சி வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த கர்ப்பிணி, அவர்களது உறவினர்கள் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், உதவியாளர் மங்களேஷ்வரி ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக சிகிச்சைக்காக அனைவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:விசிக, ஆதித்தமிழர் பேரவை கொடிகள் சேதம் - காவல் துறையினர் புகார்

ABOUT THE AUTHOR

...view details