சென்னை:ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனால் வழங்கப்பட்டு, அங்கு நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் 13 அடி முழு திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (அக் 27) திறந்து வைத்தார்.
அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.. - MK Stalin
சென்னையில் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்ரமணியன், பி.கே.சேகர்பாபு, சி.வி.கணேசன், மனோ தங்கராஜ் மற்றும் கயல்விழி செல்வராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:12ம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு நாளை சிறப்பு முகாம்