சென்னை: 2023-24ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.5,337.18 கோடி சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைக் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பில்,
* ’மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுப்பெண் என்ற புதிய திட்டத்தின் மூலம் 2,09,365 மாணவிகளுக்கு மாதம் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுவதால் பல பெண்கள் இளங்கலை, தொழில்பயிற்சி மற்றும் பட்டய கல்வியனை கற்று வருகின்றனர். மேலும் இதற்காக 2023-2024ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூபாய் ரூ. 349.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கடந்த 2022ஆம் ஆண்டில் 2532 குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
* சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு 2023 - 2024ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 2022-23ஆம் கல்வியாண்டில் 42.16 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு தைத்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தையல் கூலி ரூ.98 கோடி பள்ளிக்கல்வித்துறை வாயிலாக சமூக நலத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
* தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கியதில் இருந்து, மார்ச் 2023 வரை 5,928 குழந்தைகள் பெறப்பட்டுள்ளனர். (ஆண் - 1346, பெண் - 4582) இதற்காக 2023-24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.25.79 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு 2023- 24ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.92.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அரசு சேவைகள், இல்லங்கள் மூலம் 2022-23ஆம் ஆண்டில் இந்த இல்லங்களில் 626 பெண் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். மேலும் இதற்காக 2023-2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 6.11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள், 2023-24ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மதிப்பீட்டில் ரூபாய் 1.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள், 2023-24ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 59.19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சிறப்பு இல்லங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங்கள், 2023-24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 16.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மூத்த குடி மக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்திற்காக வரும் 2023-24ஆம் நிதி ஆண்டில் 72 திட்டங்கள் மூலம் 35 முதியோர் பயன்பெறும் வகையில் மானியங்களுக்காக ரூ.17.04 கோடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் 2023 - 24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* திருநங்கைகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத் திட்டத்திற்கு 2023 - 24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 2.36 கோடியின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரிய 2023-24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மதிப்பீட்டில் ரூ.94.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.