தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளாட்சிப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்து வந்தனர்.
இதன் பின்னர் உள்ளாட்சிப் பணிகளை செயல்படுத்திட சிறப்பு அலுவலர்கள் அந்தஸ்த்தில் பஞ்சாயத்து, பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு நியமியமிக்கப்பட்டனர். தொடர்ச்சியாக உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தப்பட வேண்டும் என திமுக உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகள் வழக்கு தொடர்ந்தது.
உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையின் போது டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 2ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுவதாகவும் தெரிவித்தது.