முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்யினருடனும் ஆலோசித்து ஒருமித்த முடிவாக எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, அவரின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக அறிவித்தார்.
ஜூலை 8ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்!
சென்னை: முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து ஆலோசிக்க ஜூலை 8ஆம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
edapadi
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க வருகின்ற ஜூலை 8ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.