தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிதி அமைச்சரின் அறிவிப்பை எதிர்த்து வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டம்! - அகில இந்திய வங்கிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடச்சலம்

சென்னை: பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படவுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

all india banks association protest

By

Published : Aug 31, 2019, 2:16 AM IST


மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், நாட்டில் செயல்பட்டுவரும் 27 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 12 பொதுத்துறை வங்கிகளாக மாற்றப்படும் என குறிப்பிட்டார். இதனால் வங்கிகளின் மதிப்புகளும் உயரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை கண்டித்து பேசிய, அகில இந்திய வங்கிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடச்சலம், இந்தியாவில் மக்களுக்கு மெகா வங்கிகள் தேவையில்லை. இங்கு பல கிராமங்களில் மக்களின் பயன்பாட்டிற்கே வங்கிகள் இல்லாத சமயத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இது தேவையற்ற அறிவிப்பாக உள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details