தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 18, 2021, 5:48 PM IST

ETV Bharat / state

சென்னையில் விமான சேவை மீண்டும் அதிகரிப்பு!

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் 19 மாதங்களுக்கு பிறகு விமான சேவை 224 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் பயணிகளின் எண்ணிக்கையும் 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

சென்னை
சென்னை

சென்னை: நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதையடுத்து ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உள்நாட்டு விமானநிலையங்களில் 100% பயணிகள் விமானங்களை இயக்க அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலும் விமானங்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. 19 மாதங்களுக்கு பின்பு இன்று (அக்.18) புறப்பாடு விமானங்கள் 113, வருகை விமானங்கள் 111 என மொத்தம் 224 விமானங்கள் இயக்கப்பட்டன.

விமான சேவை அதிகரிப்பு

டில்லிக்கு புறப்பாடு விமானங்கள் 15, வருகை விமானங்கள் 15 என 30 விமானங்கள், அதேபோல் மும்பைக்கு 30 விமானங்கள், பெங்களூருக்கு 22 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னை உள்நாட்டு விமானநிலையம்

பயணிகளின் எண்ணிக்கை உயர்வு

இதனால் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களில் 15 ஆயிரத்து 600 பேரும், புறப்பாடு விமானங்களில் 13 ஆயிரத்து 500 பேரும் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனா். டில்லி, மும்பை, கொல்கத்தா, கவுகாத்தி, பெங்களூரு, கோவை விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

சென்னை உள்நாட்டு விமானநிலையம்

அடுத்த சில நாட்களில் விமான சேவைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விமான நிலைய அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஐபிஎஸ் அலுவலர்கள் 5 பேர் டிஜிபி ஆக பதவி உயர்வு

ABOUT THE AUTHOR

...view details