தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துபாயிலிருந்து இந்தியர்களை ஏற்றிவரும் விமானம் தாமதம்! - விமானம் தாமதம்

சென்னை: துபாயிலிருந்து தமிழா்கள் உள்ளிட்ட இந்தியா்களை ஏற்றி கொண்டு சென்னை வரவேண்டிய ஏா் இந்தியாவின் தனி விமானங்கள் சென்னை வருவது பல மணி நேரம் தாமதம் ஏற்ப்பட்டுள்ளது

Air India flights from Dubai with Indians was delayed, officials said
Air India flights from Dubai with Indians was delayed, officials said

By

Published : May 8, 2020, 7:50 PM IST

வளைகுடா நாடுகளிலில் வசிக்கும் இந்தியா்களை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு வருவதற்காக இரண்டு ஏா் இந்தியா விமானங்கள் இன்று மாலை 3.15 மணிக்கும் பகல் 4.30 மணிக்கும் பயணிகள் இல்லாமல் காலியான விமானங்களாக துபாய்க்கு செல்லும் என்றும், அங்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு, முதல் சிறப்பு தனி விமானம் துபாயில் புறப்பட்டு இன்று நள்ளிரவு 12.30 மணிக்கும், அடுத்த தனி விமானம் நாளை அதிகாலை 1.30 மணிக்கும் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்து சேரும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த விமானங்கள் ஒவ்வொன்றிலும் சுமாா் 200 பயணிகள் வீதம் 400 போ் சென்னை அழைத்துவரப்படுகின்றனா். அவா்களில் பெரும்பான்மையோா் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள். அவா்கள் அனைவரையும் சென்னை சா்வதேச விமானநிலையம் வருகைப் பகுதியில் தகுந்த இடைவெளியில் நிற்கவைத்து மருத்துவப் பரிசோதனை, குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

பின்பு அவா்களை வாகனங்களில் ஏற்றி, அவா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், நட்சத்திர ஓட்டல் தங்கும் விடுதிகளுக்கு அழைத்து சென்று தனிமைப்படுத்தப்படுகின்றனா். இந்நிலையில், இந்த விமானங்கள் வருவதில் பல மணி நேரம் தாமதம் ஏற்படும் என, ஏர் இந்தியா அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையிலிருந்து துபாய் செல்ல வேண்டிய ஏா் இந்தியா விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் வருவது தாமதம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..'இரண்டு மாசம் சம்பளம் கொடுத்தோம்... இப்போ முடியல' - கைவிரித்த இண்டிகோ

ABOUT THE AUTHOR

...view details