பொறியியில், தொழில்நுட்பகல்வி நிறுவனங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள், பணியாளர்களின் உண்மைச் சான்றிதழ்களை அந்நிறுவனங்கள் பெற்று தர மறுத்தால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் செயலாளர் அலோக் பிரகாஷ் மிட்டல் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, 'அகில இந்திய தொழில்நுட்பகல்வி கழகத்திற்கு பணியை ராஜினாமா செய்தவர்கள், பணியிலிருந்து சென்றவர்களின் உண்மையான கல்வித் தகுதி சான்றிதழ்களை அகில இந்திய கல்விக்கழகத்தின் விதிமுறைகளுக்கு மாறாக பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் வைத்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
விதிகளின்படி இதுபோன்று வைத்துக்கொள்ள அனுமதி கிடையாது. ஏதாவது விதிமீறல்கள் நடைபெற்றால் அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.