சென்னை:சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 25) அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து பேச முற்பட்ட போது அமைச்சர் பெரியகருப்பன் மரியாதை குறைவாக ஒருமையில் பேசியதாக கூறி அதனைக் கண்டித்து அதிமுகவினர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், "சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து
பேச முற்பட்ட போது அமைச்சர் பெரியகருப்பன் மரியாதை குறைவாக உட்காருடா என ஒருமையில் பேசினார். அமைச்சர் பெரியகருப்பன் பேச்சை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.