செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை. இது என் தனிப்பட்ட முடிவல்ல இதுதான் கட்சித் தலைமையின் முடிவும் எங்கள் தலைவர்களை விமர்சிப்பதை அண்ணாமலை நிறுத்தாவிட்டால், அதிமுக பதிலடி கொடுக்கும். அண்ணாமலை தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்குக் கீழ் தான் வாக்குகள் வாங்குவார் அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மதிக்கவில்லை.
பாஜகவுக்குக் காலே இல்லை; பிறகு எப்படி தமிழ்நாட்டில் கால் ஊன்று முடியும், அதிமுகவுக்கு தேவையில்லாத சுமை தான் பாஜக. பாஜக தேவையில்லை என கட்சித் தலைமை முடிவு செய்துவிட்டது. அண்ணாமலை அரசியலுக்கே தகுதி இல்லாதவர் பாஜக தலைவர் பதவிக்கும் தகுதி இல்லாதவர், அண்ணாவை விமர்சித்த அண்ணாமலையை இனி ஏற்க முடியாது.
சிங்கக் கூட்டத்தைப் பார்த்து சிறுநரி ஊளையிடுகிறது, அவதூறு பேசுவதை நிறுத்தாவிட்டால் அண்ணாமலை மீது தாறுமாறாக விமர்சனங்கள் பறக்கும். அதிமுக தலைவர்களை அண்ணாமலை விமர்சித்தால், தேர்தலில் தொண்டர்கள் எப்படி பணியாற்றுவார்கள்?" என்று கூறினார்.
பெரியார், அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அண்ணாமலை விமர்சனங்களை முன்வைத்து வந்ததால், அதிமுக-பாஜக இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. அண்மையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா கூறிய பகுத்தறிவுக் கருத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் அதற்குப் பின் அண்ணா முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டார் என்றும் குறிப்பிட்டார். இதனால் அதிமுக - பாஜக இடையேயான மோதல் பூதாகரமாகியுள்ளது.
இதையும் படிங்க:தெலங்கானா சட்டமன்ற தேர்தல்... கவர்ச்சிகர அறிவிப்புகளை அள்ளிவிட்ட காங்கிரஸ்.. எல்லாம் திமுக மாடல் தான்?