தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல்: அதிமுக வகுக்கும் புது வியூகம் - AIADMK party action

சென்னை: நிர்வாக வசதியைக் கருத்தில்கொண்டு கழக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டுவரும் வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்களைப் பிரித்து அதிமுக அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிமுக
அதிமுக

By

Published : Oct 28, 2020, 10:55 PM IST

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டும், கழகப் பணிகளை விரைவுபடுத்தும் வகையிலும், கழக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டுவரும் வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்கள் கீழ்க்கண்டவாறு புதிய மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டு, பின்வருமாறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்பதையும் மாவட்டக் கழகச் செயலாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாவட்ட கழகச் செயலாளர்கள் மாவட்டம் / எண் உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகள்

  • வட சென்னை தெற்கு (கிழக்கு)
    1. ராயபுரம் (17)
    2. திரு.வி.க. நகர் (தனி) (15)
    மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார்
  • வட சென்னை தெற்கு (மேற்கு)
    1. எழும்பூர் (தனி) (16)
    2. துறைமுகம் (18)
    நா. பாலகங்கா, மாவட்டக் கழகச் செயலாளர்
  • தென் சென்னை வடக்கு (கிழக்கு)
    1. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி (19)
    2. ஆயிரம் விளக்கு (20)
    ஆதிராஜாராம் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் வாரியத் தலைவர்
  • தென் சென்னை வடக்கு (மேற்கு)
    1. தியாகராயநகர் (24)
    2. அண்ணாநகர் (21)
    எம்எல்ஏ, பி. சத்தியா, மாவட்டக் கழகச் செயலாளர்
  • தென் சென்னை தெற்கு (கிழக்கு)
    1. மைலாப்பூர் (25)
    2. வேளச்சேரி (26)
    முன்னாள் எம்எல்ஏ அசோக்
  • தென் சென்னை தெற்கு (மேற்கு)
    1. விருகம்பாக்கம் (22)
    2. சைதாப்பேட்டை (23)
    எம்எல்ஏ விருகை வி.என். ரவி, மாவட்டக் கழகச் செயலாளர்

கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழகப் பணிகளை ஆற்றிட வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details