"சுரதா" என்ற புனைப்பெயரில் பல்வேறு கவிதைகள், பாடல்கள் மூலம் அனைவரையும் கவர்ந்த கவிஞர் சுப்புரத்தினதாசனின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயகுமார், க.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மதியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், “பல்வேறு கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த உவமைக் கவிஞர் சுரதா. அவரது சாதனைகளால் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தவர்” எனப் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நிவார் புயலுக்காக அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைக்கு விரைந்து திரும்புவர்" என்றார்.
"கரோனா தாக்கம் இருப்பதன் காரணமாகவும், இரண்டாம் கட்ட தாக்குதல் இருக்கும் என்ற எச்சரிக்கையின் அடிப்படையிலுமே அரசியல் கட்சிகளின் பரப்புரைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி அளவுகோலும், வேறுபாடுகளும் இல்லை. உதயநிதி தேர்தல் பரப்புரையை தடுத்து, பாஜக வின் வேல் யாத்திரைக்கு அனுமதியும் அளிக்கப்படவில்லை.