இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை! - #OPSforCM posters
11:32 August 15
சென்னை: மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்களுடன் இன்னும் சற்று நேரத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.
முன்னதாக, இவர்கள் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். இல்லத்தில் ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.