தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக அலுவலக வன்முறை வழக்கு: காவல்துறை பதிலளிக்கும் வரை கைது நடவடிக்கை கூடாது என உத்தரவு - அதிமுக மாவட்ட செயலாளர்களை கைது செய்ய கூடாது

அதிமுக பொதுக்குழு நடைபெற்ற அன்று ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 4 மாவட்ட செயலாளர்கள் முன்ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக்கூடாது என சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்களை கைது செய்ய கூடாது; போலீசார்க்கு நீதிமன்றம் உத்தரவு
அதிமுக மாவட்ட செயலாளர்களை கைது செய்ய கூடாது; போலீசார்க்கு நீதிமன்றம் உத்தரவு

By

Published : Jul 22, 2022, 5:02 PM IST

சென்னை:ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே கலவரம் நடந்தது. இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் என மொத்தம் 400 பேர் மீது பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் போன்ற 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஈ.பி.எஸ். தரப்பு ஆதரவாளர்களான தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி மற்றும் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 11 பேர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற திட்டமிட்ட தாக்குதல் மற்றும் அத்துமீறி நுழைந்து அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றதாகவும், அதனை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்ததாகவும், ஆனால் இந்த வழக்கில் தாங்கள் தவறாக இணைக்கபட்டுள்ளதாக மனுவில் தெரிவித்தார். மேலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்தார்.

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி விடுமுறை என்பதால் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி தங்க மாரியப்பன் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கபட்டது. இதையடுத்து, விசாரணையை ஜூலை 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஈபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை கைது செய்ய கூடாது என ராயப்பேட்டை காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் ஈபிஎஸ்!

ABOUT THE AUTHOR

...view details