தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்! - அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என தீர்ப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், பொதுக்குழு நடைபெற உள்ள மண்டபத்தில் 100 பேர் அமரும்படி 2000 சதுர அடியில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வானகரத்தில் 100 பேர் அமரும்படி பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரம்
வானகரத்தில் 100 பேர் அமரும்படி பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரம்

By

Published : Jul 6, 2022, 8:06 PM IST

சென்னை:வானகரத்தில் வரும் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பொதுக்குழு நடத்தக்கூடாது என ஓபிஎஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூலை 6) நடைபெற்ற நிலையில், பொதுக்குழு கூட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உச்சநீதிமன்ற அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டார். அங்கு 100 பேர் அமரக்கூடிய வகையில் 2000 சதுர அடியில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் தயாராகி வருகிறது.

வானகரத்தில் 100 பேர் அமரும்படி பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரம்

அதிமுக பொதுக்குழு நடக்குமா நடக்காதா என்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் உச்சநீதிமன்ற உத்தரவு வெளியான சிறிது நேரத்தில் ஈபிஎஸ் தரப்பு முக்கிய நிர்வாகிகள் வானகரத்தில் ஆய்வு மேற்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்: வைத்திலிங்கம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details