சென்னை :முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி வழக்கை தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு அட்டவணை, ஓபிஎஸ் அளிக்கும் மனு ஆகியவற்றை ஆராய்ந்து முடிவெடுக்கக் காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று ஓபிஎஸ் ஆவடி காவல் ஆணையரகத்தில் மனு அளித்துள்ளார். ஆனாலும் ஆவடி காவல் ஆணையரகம் இந்த பிரச்சினை குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி உள்ளது.