சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் கூட்டணி, தேர்தல் வியூகம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் 25வது தொழில்நுட்பத் திருவிழா; ஏஐ மூலம் வேலை இழப்பா? - இயக்குனர் காமகோடி பதில்!
மேலும் இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ராணிப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாஸ்டர் கிளாஸ் எனும் தலைப்பில் கட்சியில் ஐடி விங் செயல்பாடுகளை ஒருங்கினைக்க “கனெக்ட்” என்ற புதிய செயலியை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கு; சிறை தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!