தேனி மாவட்ட மருத்துவ அணித் தலைவர் டாக்டர் P. சொக்கலிங்கம் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
டாக்டர் சொக்கலிங்கம் மறைவு; அதிமுக இரங்கல்! - Thenai medical team leader died
சென்னை: தேனி மாவட்ட மருத்துவ அணித் தலைவர் டாக்டர் P. சொக்கலிங்கம் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதில், “தேனி மாவட்ட மருத்துவ அணித் தலைவர் டாக்டர் P. சொக்கலிங்கம் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். அன்புக் கணவரை இழந்து வாடும், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தேனி மாவட்ட மகளிர் அணிச் செயலாளருமான, அன்புச் சகோதரி டாக்டர் C. தனலட்சுமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், டாக்டர் சொக்கலிங்கத்தின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.