தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

படுகொலை செய்யப்பட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் மறைவிற்கு அதிமுக இரங்கல் - அதிமுக இரங்கல்

சென்னை: இளைஞரணி இணைச் செயலாளர் ராமச்சந்திரன் மறைவிற்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

அதிமுக
அதிமுக

By

Published : Sep 22, 2020, 4:32 AM IST

அதிமுக இளைஞர் அணி இணைச் செயலாளரும், பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவருமான செ. அரசு (எ) ராமச்சந்திரன் முன்விரோதம் காரணமாக, அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளரும், பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவருமான செ.அரசு (எ) ராமச்சந்திரன் முன்விரோதம் காரணமாக, அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.‌

இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு முறையான தண்டனையைப் பெறுவார்கள். அன்புச் சகோதரரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details