தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆ. ராசாவை தேர்தல் பரப்புரை செய்ய அனுமதிக்கக் கூடாது!' - chennai district news

சென்னை: ஆ. ராசாவை தேர்தல் பரப்புரை செய்ய அனுமதிக்கக் கூடாது எனத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆ. ராசா தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது
ஆ. ராசா தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது

By

Published : Mar 27, 2021, 3:46 PM IST

திமுக சார்பில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் நேற்று முன்தினம் (மார்ச் 25) தேர்தல் பரப்புரை நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான ஆ. ராசா தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆ. ராசா தேர்தல் பரப்புரை செய்யக் கூடாது

இந்நிலையில் தேர்தல் விதிமீறல் அடிப்படையில் ஆ. ராசா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக சார்பில் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் அதிமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆ. ராசா தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது

ஆ. ராசா தேர்தல் பரப்புரையில் தரக்குறைவாகப் பேசிவருவதால், தொடர்ந்து அவரைத் தேர்தல் பரப்புரை செய்ய அனுமதிக்கக் கூடாது எனவும் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறன் புகார் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க: ’பதவி சுகம் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்றார்’ - ஆ.ராசா தாக்கு

ABOUT THE AUTHOR

...view details