சென்னை:தாம்பரத்தில் தேர்தல் அலுவலர் ரவிச்சந்திரனிடம் தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னய்யா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு கூட்டணிக் கட்சியினர் பெரும் வரவேற்பளித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
விதிகளை மீறி ஆறு பேருடன் சென்று அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் - tambaram
தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் தொகுதிகளில் கூட்டணிக் கட்சியினர் பலரோடு சென்று அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, பல்லாவரத்தில் பாமக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளோடு மேளதாளங்கள் முழங்க அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் பெருந்திராளாக சென்று தேர்தல் அலுவலர் லலிதாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர், சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன், சோழிங்கநல்லூர் தேர்தல் அலுவலர் லட்சுமனனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, தேர்தல் விதிகளை மீறி கே.பி கந்தன் அதிமுக நிர்வாகி ஆறு பேருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்ததாக அவர் மீது தேர்தல் அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கத்தார் ஓபன்: 4ஆவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய பசிலாஷ்விலி!