தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சென்னையில் மேற்கொண்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பிற மாவட்டங்களிலும் வேண்டும்' - எல்.முருகன்

சென்னை: சென்னையைப் போல் மற்ற மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பரவலைக் குறைக்க வேண்டும் என்று எல். முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எல்.முருகன்
எல்.முருகன்

By

Published : Jul 11, 2020, 6:39 PM IST

சென்னை கமலாலயம் பாஜக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் ஆகியோரது பிறந்தநாளையொட்டி அவர்களது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட காணொலிக் காட்சிக் கூட்டங்களை நடத்தியுள்ளோம். அதில், மத்திய அரசின் திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்துகொண்டார்.

திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் மலர் தூவி மரியாதை

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும். அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம்” என்றார். கரோனா தடுப்புப் பணியில் அரசு சிறப்பாகச் செயல்பட்டுவருவதாகக் கூறிய அவர், சென்னையில் ஒவ்வொரு பகுதியாகப் பிரித்து, அதற்கு நிர்வாகிகளை நியமித்ததுபோல் மற்ற மாவட்டங்களிலும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:இன்பத்தமிழ்க் கருவூலம் நம் நாவலர் - மு.க.ஸ்டாலின் புகழாரம்

ABOUT THE AUTHOR

...view details