தமிழ்நாட்டில் நாளை (ஏப்.06) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி, உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம், முன்னாள் அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனின் காட்பாடி, எ.வ.வேலு போட்டியிடும் திருவண்ணாமலை, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்திற்கு வந்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், பணநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து திமுக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினார்.