தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆர்எஸ் பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல்

சென்னை: நீதிபதிகள் நியமனத்தை விமர்சித்த குற்றச்சாட்டில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ். பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

rs bharathi
ஆர்எஸ் பாரதி

By

Published : Jan 18, 2021, 9:55 PM IST

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்தார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால பிணை வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிகள் தங்கள் திறமையால் அல்லாமல் அரசியல் கட்சிகளின் ஆதரவாலேயே அந்த பதவிக்கு வருகிறார்கள் என்பதை போல் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு இருந்ததாகவும், இது ஒட்டுமொத்த நீதித்துறையின் மாண்பை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு வழக்கறிஞர் ஆண்டனி ராஜ் என்பவர் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்து அவர் எடுத்துள்ள முடிவில், நீதித்துறையின் மாண்பை குலைக்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதி பேசியது உறுதியாகி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு குறித்து விசாரணை நடத்த உகந்த வழக்கு என்பதால் அனுமதி அளிப்பதாக தன் முடிவு தொடர்பான கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:குயின் வெப் தொடர்: ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை மீது களங்கம் - தீபா குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details