சென்னை:தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம்தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை அந்தந்த மாவட்டங்களில் தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் நடைபெறவுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று பரப்புரை செய்ய இருப்பதாக கமல் ஹாசன் அறிவித்திருந்தார்.