தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் பாலை தொடர்ந்து நெய் விலையும் உயர்வு - ஆவின் தயிர் விலை உயர்வு

ஆவின் நெய் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின்
ஆவின்

By

Published : Dec 16, 2022, 1:31 PM IST

Updated : Dec 16, 2022, 4:06 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நெய் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருவதாக அனைத்து ஒன்றியங்களின் பொது மேலாளர்களுக்கும் நிர்வாக இயக்குனர் சுப்பையன் சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில் புதிய விலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆவினில் நெய் ஒரு லிட்டர் ரூ.580ல் இருந்து ரூ.630 ஆகவும், 500 மி.லி ரூ.290ல் இருந்து ரூ.315 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 200 மி.லி ரூ.130ல் இருந்து ரூ.145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால் பொதுமக்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் ஆவின் ஆரஞ்சு பால், ஜூலை மாதம் தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எனக்கு கரு நாக்கு, வெளியே நீட்டி காட்டிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்

Last Updated : Dec 16, 2022, 4:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details