தமிழ்நாடு

tamil nadu

ஒரு நாள் போலீஸ்... சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய துணை ஆணையர்!

By

Published : Dec 5, 2020, 6:55 AM IST

சென்னை: ஐபிஎஸ் அலுவலராக தான் வரவேண்டும் என்ற கனவோடு இருந்த நான்கு வயது சிறுவனின் ஆசையை அடையாறு துணை ஆணையர் நிறைவேற்றியுள்ளார்.

police
police

சென்னையில் தனது பெற்றோருடன் வசிக்கும் நான்கு வயது சிறுவனான ஹரிஷ்-க்கு தான் பெரியவன் ஆனதும் போலீஸ் ஆகவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதுவும் ஐபிஎஸ் அலுவலராகதான் வரவேண்டும் என்ற கனவோடு இருந்துள்ளார்.

சிறுவனின் இந்த ஆசை குறித்து அடையாறு காவல் துணை ஆணையரான விக்ரமனுக்கு தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று (டிச.04) சிறுவன் ஹரிஷின் பிறந்தநாள் என்பதால் துணை ஆணையர் விக்ரமன் பெற்றோரிடம் சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து வரும்படி கூறியுள்ளார்.

துணை ஆணையர் விக்ரமன் ட்விட்டர் பதிவு

சிறுவனின் பெற்றோரும் ஹரிஷ்-க்கு காவலர் உடை உடுத்தி கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனுக்கு துணை ஆணையர் விக்ரமன் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டதோடு, கேக்வெட்டி ஹரிஷின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனால் சிறுவன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளார்.

இதன் பின்னர் துணை ஆணையர் விக்ரமன் தனது ட்விட்டரில், சிறுவனுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, ஹரிஷ் வளர்ந்த பின்பு கட்டாயமாக ஐபிஎஸ் அலுவலராக ஆவார் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டைப் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க:காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு கட்டாயம்! தமிழ்நாடு காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details