தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடத்த மூன்றாவது நாளாகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஆகஸ்ட் 18) தொடங்கியது. அப்போது, அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அதிமுகவினர் பதாகைகளை ஏந்தி திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அமளி செய்தனர். இதையடுத்து பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டப்பேரவையில் அதிமுகவினர் பதாகைகள் கொண்டுவந்தது தவறு, விதியை மீறி அவையில் இதுபோல் ஈடுபடுவது தவறு, அவையை கண்ணியமாக நடத்தவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகள் தர்ணா
அப்போது, அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கும் நடவடிக்கையில் (எஸ்.பி. வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவின் முக்கியத் தலைவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை) திமுக அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது எனக் கூறி அதிமுகவினர் வெளிநடப்புச் செய்தனர். அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.
கோடநாடு கொலை வழக்கு: விசாரணையில் எடப்பாடி பழனிசாமி குறித்து சயான் பேசியதாகத் தகவல்
முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை, நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை நடைபெறுகிறது. மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்க வேண்டும் என்றார். இந்த நிலையில், வெளிநடப்புச் செய்த எதிர்க்கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.