சென்னை கொரட்டூர் அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் தீபா சியாலன். இவர் சென்னை மாநகராட்சி 83ஆவது வார்டில் முன்னாள் கவுன்சிலராக இருந்தவர். அதிமுக பிரமுகரான இவரது கணவர் சியாலன்வீட்டின் முன்பு ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது. அங்கு சூதாட்டம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
'ரம்மி' சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் கைது! - ரம்மி
சென்னை: கொரட்டூரில் பணம் வைத்து 'ரம்மி' சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் உட்பட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
admk Personality -arrested-for-rummy gambling-in Korattur
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான காவலர்கள், அங்கு பணம் வைத்து 'ரம்மி' சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேரை கையும்,களவுமாக பிடித்தனர்.
மேலும்,'ரம்மி' விளையாட்டில் பந்தயம் கட்டிய 2.15லட்சம் ரூபாய் சூது பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரில் இரண்டு பேர் அதிமுக பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.