சென்னை:கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் மற்றும் அவரை எதிர்த்து திமுக சார்பில் வேட்பாளர் பழனியப்பனும் போட்டியிட்டனர். இதில், 23 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பழனியப்பனை தோற்கடித்து விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையும் படிங்க:ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு.. தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!
ஆனால் விஜயபாஸ்கர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வெற்றி பெற்றதாக திமுக வேட்பாளர் பழனியப்பன் குற்றச்சாட்டு முன்வைத்தார்.மேலும் அந்த தொகுதியை சேர்ந்த திமுக பிரமுகர்கள் பலரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து, விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், விராலிமலை தொகுதி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை வினியோகித்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார் எனவும், அதனால் தேர்தல் ஆணைய விதிகளை மீறி விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.