தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்பு

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்க உள்ளனர்.

tn

By

Published : May 28, 2019, 7:55 PM IST

மக்களவைத் தேர்தலோடு தமிழ்நாட்டில் நடைபெற்ற 22 தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களையும், அதிமுக 9 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

இதில், புதிதாக வெற்றி பெற்றுள்ள 13 திமுக எம்எல்ஏக்கள் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் அறையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், அதிமுக சார்பில் வெற்றிபெற்ற ஒன்பது எம்எல்ஏக்கள் நாளை காலை 9:30 மணி முதல் 10: 30 மணிக்குள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சபாநாயகர் அறையில் பதவி ஏற்றுக்கொள்ள உள்ளனர்.

இதை முடித்துக்கொண்டு பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details