ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராதாபுரம் தொகுதிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக அதிமுக எம்எல்ஏ அவசர முறையீடு! - dmk mla appavu
சென்னை: ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவை எதிர்த்து இன்பதுரை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
அப்போது, இந்த வழக்கில் மனுதாரர் அப்பாவு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 4ஆம் தேதி ஒத்தி வைத்தார். மேலும், தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து அனைத்து வேட்பாளர்களிடமும் கருத்து கேட்க வேண்டும் என்றும் காவல் துறை பாதுகாப்பு வழங்கவேண்டி இருப்பதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். ஆனால், இதனை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.