சென்னை ஆவடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தொற்று நோய்த்தடுப்பு பணிகளுக்கான 42 மருத்துவக் குழுக்கள் மற்றும் 10 புகை தெளிப்பான் வாகனங்களை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆவடி பொது மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர் நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து ஆவடி மாநகராட்சி, மழை கால நோய்த்தடுப்பு பணி மற்றும் மருத்துவ முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.