தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய அவைத்தலைவர் குறித்து ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் ஆலோசனை - இன்றைய செய்திகள்

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், புதிய அவைத்தலைவர் குறித்து ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதிமுக
அதிமுக

By

Published : Oct 11, 2021, 12:32 PM IST

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளான ஜெயக்குமார், சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, காமராஜ், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், புதிய அவைத்தலைவர் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

மேலும் அதிமுக பொன்விழா ஆண்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், பொன்விழாக் கொண்டாட்ட நிகழ்வுகள், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா செல்லவிருப்பது ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:ஜெயப்பிரகாஷ் நாராயண் 119ஆவது பிறந்தநாள் - பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!

ABOUT THE AUTHOR

...view details