சென்னை: திருவண்ணாமலை, காட்பாடி, திருச்சி மேற்கு, கொளத்தூர், சேப்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக பணப் பட்டுவாடா, செய்வதாகவும் இந்தத் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஜெயக்குமார், தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் மனு அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவண்ணாமலை, காட்பாடி, திருச்சி மேற்கு, கொளத்தூர், சேப்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக பணப் பட்டுவாடா, செய்கிறது, இந்தத் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்.
திருவண்ணாமலை, காட்பாடி உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தல் ரத்து? திமுகவைச் சேர்ந்த கே.என். நேரு திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில், காவல்துறையினருக்கு பணம் கொடுத்துள்ளார். திமுகவினர் திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்துகின்றனர்.
திமுக பண நாயகத்தின் மூலம் ஜனநாயகத்தை கொலை செய்து வருகிறது. மேலும், வாக்காளர்களுக்கு கூகுள் பே மூலம் பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படாமல் நேர்மையுடன் செயல்பட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:உற்சாகமும் நம்பிக்கையுமாக கடமையாற்றுங்கள்... நாளை நமதே! - டிடிவி தினகரன்