இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழக நிறுவனத் தலைவர் பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் சகோதரர் எம்.ஜி சக்ரபாணியின் மகன் எம்.சி சந்திரன்(75) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.
எம்ஜிஆரின் சகோதரர் சக்ரபாணியின் மகன் மறைவிற்கு அதிமுக இரங்கல்! - சக்கரபாணி மகன் எம்சி சந்திரன் மறைவு
சென்னை: எம்ஜிஆரின் சகோதரர் சக்ரபாணியின் மகன் எம்.சி. சந்திரன் மறைவிற்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.
எம்.சி. சந்திரன் மறைவிற்கு அதிமுக இரங்கல்
அன்புச் சகோதரர் சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அதிமுக, அமமுக இணைவது குறித்து மு.க.ஸ்டாலின் போல ஜோதிடம் சொல்ல முடியாது' - செல்லூர் ராஜு