தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 7, 2020, 12:28 PM IST

ETV Bharat / state

பேராசிரியர் க.அன்பழகன் மறைவு - அதிமுக இரங்கல்!

சென்னை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

பேராசிரியர் அன்பழகன் இறப்புக்கு அதிமுக இரங்கல்!
பேராசிரியர் அன்பழகன் இறப்புக்கு அதிமுக இரங்கல்!

இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், 'திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவரான க.அன்பழகன், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர். போன்ற திராவிட இயக்க முன்னோடித் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பும், நட்பும் கொண்டிருந்தார்.

மறைந்த மு.கருணாநிதியுடன் இணைந்து அரசியலில் பயணித்தவரும், திமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் க.அன்பழகன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றோம். தமிழ்ப் பற்றும், தேசிய உணர்வும் கொண்ட குடும்பத்தில் பிறந்த க.அன்பழகன், கல்லூரிப் பேராசிரியராக தனது வாழ்வைத் தொடங்கி, மக்களாட்சியின் அனைத்து நிலைகளிலும் பங்குப்பெற்று பணியாற்றிய சிறப்புக்குரியவர்.

அதிமுக இரங்கல் அறிக்கை

அன்பழகன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சராகவும், உறுப்பினராகவும் பணியாற்றிய ஆண்டுகளில், அவரது தமிழ்ப் புலமையையும், பெருந்தன்மையான உரைகளையும், கொள்கை மாறாத நட்புறவையும், வியப்புக்குரிய உழைப்பையும் கண்டு வியந்துள்ளோம். அவரது மறைவு தமிழ்நாடு அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: க. அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details