தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மைத்ரேயனின் மூத்த சகோதரி மறைவிற்கு அதிமுக இரங்கல் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்

அதிமுக அமைப்புச் செயலாளர் மைத்ரேயனின் மூத்த சகோதரி மறைவிற்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ADMK condolence for their Secretary maithreyan sisters death
ADMK condolence for their Secretary maithreyan sisters death

By

Published : Sep 26, 2020, 9:04 PM IST

சென்னை:அதிமுக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் மருத்துவர். மைத்ரேயனின் மூத்த சகோதரி மாலினி மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.

பாசமிகு சகோதரியை இழந்து வாடும் அன்புச் சகோதரர் மைத்ரேயன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மாலினியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:'நான் இறந்தால் மவுன அஞ்சலி செலுத்த வேண்டாம்' - கண்கலங்கிய மைத்ரேயன்

ABOUT THE AUTHOR

...view details