தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில், அதிமுக சார்பாக பாரிவாக்கத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வைத்தியநாதன் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
பூந்தமல்லி அதிமுக வேட்பாளர் வைத்தியநாதன் நேற்று வேட்புமனு தாக்கல் - அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
திருவள்ளூர்: பூந்தமல்லி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவிருக்கும் வைத்தியநாதன் நேற்று பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், வைத்தியநாதன் நேற்று பூந்தமல்லி அரசு மருத்துவமனை அருகே உள்ள தனது தேர்தல் அலுவலகத்திலிருந்து அமைச்சர்கள் பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் என 500க்கும் அதிகமானோருடன் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகம் வந்தார்.
பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்னாவிடம், வேட்பாளர் வைத்தியநாதன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்படும் பட்சத்தில் மாற்று வேட்பாளராக அவரது மனைவி தங்கம் வைத்தியநாதன் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆவணங்களை சரிபார்த்த தேர்தல் அலுவலர் வேட்பு மனுவைப் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, நேற்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்தவர்களின் தகவல் அடங்கிய சுவரொட்டி தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.