தமிழ்நாட்டில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 20ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 20ஆம் தேதிவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்தது. இந்தப் படிப்புகளில் சேர சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மாணவர்கள் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த பாலிடெக்னிக் கல்லூரியில் அவர்களுக்குரிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்றுமுதல் தொடங்கியுள்ளது.
இது குறித்து சென்னை மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் பத்மநாபன் கூறியதாவது, “ஆன்லைன் மூலம் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியல் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்திலிருந்து அனுப்பப்பட்டது.