சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் நேற்று (ஜனவரி 9) தொடங்கியது. இன்று(ஜனவரி 10) மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சின்னசாமி, தில்லை காந்தி என்கிற ஆதிமூலம், துரை கோவிந்தராசன், ந.சோமசுந்தரம் ஆகியோருக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
இரங்கல் தீர்மானத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு - tnassembly
இரங்கல் தீர்மானத்துடன் சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
இரங்கல் தீர்மானத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு
இதனை அடுத்து மறைந்த தமிழறிஞர்கள் நெடுஞ்செழியன், ஒளவை நடராசன், பிரபல வசனகர்தா ஆரூர் தாஸ், பிரபல ஓவியர் மனோகர் தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய துணை தலைவர் மஸ்தான், கால்பந்து விளையாட்டு வீரர் பீலே, மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா ஆகியோரது மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு பேரவையில் இன்றைய நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க:'ஆளுநரின் ஆளுமையே நமஸ்தே' புதுக்கோட்டையில் பாஜக போஸ்டர் அடித்து ஆதரவு