சென்னை:பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று (அக்.13) மதியம் தனியார் கல்லூரி மாணவி சத்யா அவரது வீட்டருகே வசித்து வரும் சதீஷ் என்பவரால், ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளி சதீஷை நேற்று நள்ளிரவே கைது செய்தனர்.
தொடர்ந்து இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே மகள் இறந்த சோகத்தில் சத்யாவின் தந்தை மாணிக்கமும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலைச் சம்பவம் அரங்கேறிய நேற்றைய தினம் ரயில்வே ஏடிஜிபி வனிதா மாம்பலம் முதல் பரங்கிமலை வரை மின்சார ரயிலில் நேரடியாகப் பயணித்து ரயிலில் பயணம் மேற்கொள்ளும் நிலை மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
ஏடிஜிபி வனிதா ரயிலில் ஆய்வு மேலும், அப்போது ரயிலில் பயணம் செய்த பெண்களிடமும் அவர்கள் பாதுகாப்பு நிலை எவ்வாறு உள்ளது என்பதை கேட்டறிந்தார். இதனையடுத்து மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:'ரயில்ல தள்ளிவிட்டு தண்டனை கொடுங்க...' - சத்யா மரணம் குறித்து விஜய் ஆண்டனி ட்வீட்!